IND vs AUS: அரைசதம் கடந்தது குறித்து கேஎல் ராகுல் ஓபன் டாக்!

Updated: Sat, Mar 18 2023 12:43 IST
Image Source: Google

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி வான்கடேவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றது. 

இப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கே எல் ராகுல் 75 ரன்கள் விளாசி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் ஒரே போட்டியில் மீண்டும் ஹீரோ ஆனார். கடந்த சில மாதங்களாக ராகுல் சரிவர கிரிக்கெட் போட்டிகளில் ரன்கள் சேர்ப்பதில்லை.குறிப்பாக டெஸ்டில் தனது துணை கேப்டன் பதவியையும் அடுத்து அணியில் இடத்தையும் இழந்தார். இந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற முதல் ஒரு நாள் ஆட்டத்தில் ராகுல் பரிதாபமான நிலையில் இருந்த அணியை வெற்றிக்கு ஜடேஜா உடன் சேர்த்து அழைத்துச் சென்றார்.

இது குறித்து செய்தியாளரிடம் பேசிய கேஎல் ராகுல், “நான் மூன்று விக்கெட் இழந்த விதத்தை பார்த்தேன். மிட்செல் ஸ்டார்க் பந்தை நன்றாக ஸ்விங் செய்தார். பந்தை அவர் ஸ்டெம்புக்கு கொண்டு செல்லும்போது, அவர் மிகவும் அபாயகரமான பந்துவீச்சாளராக இருக்கிறார். நான் இன்று எப்போதும் போல் சாதாரண கிரிக்கெட் ஆட்டத்தையே வெளிப்படுத்தினேன்.

முதலில் சில பவுண்டரிகள் அடிக்க முடிந்தது. அதன் பிறகு என்னுடைய பதற்றம் போனது. நான் சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா மூன்று வீரர்களுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினேன். அவர்களுடன் ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்களுக்கு உதவி இருக்கிறது. இதனால் ரன்களை சேர்க்காமல் அமைதியாக இருக்க வேண்டாம் ,ஷாட் அடிக்க முடிந்தால் அடித்து விளையாட வேண்டும் என்று தான் பேசினோம்.

நாங்கள் நேர்மறையான எண்ணங்களுடன் களத்தில் நின்று ஆஸ்திரேலியா வீரர்கள் மோசமான பந்தை வீசினால் அதை அடித்து ரன் சேர்க்க திட்டமிட்டு நமது ஷாட் விளையாடும்போது கால்கள் சரியாக இருந்தால் நாம் அன்று ஜொலிக்க முடியும். ஜடேஜாவுடன் இணைந்து விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இடது கை பேட்ஸ்மேன் களத்திற்கு உள்ளே வந்த பிறகு எனக்கு சில ஈஸியான பந்துகள் கிடைத்தது.இது சிறந்த பவுலர்களுக்கு நிச்சயம் நடக்கும்.

ஜடேஜா களத்திற்கு வந்தது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. ஏனென்றால் அவர் விரைவாக ரன் ஓடுவார். அவரும் நல்ல பார்மில் இருக்கிறார். இந்த மாதிரி சூழலில் எப்படி விளையாட வேண்டும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். நாங்கள் ரன்கள் சேர்க்க முயற்சித்த போது ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லை. சமி இரண்டாவது முறையாக பந்து வீசும் வரும்போது அவர் அதிசயத்தக்க வகையில் செயல்பட்டார் .

ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆட்டத்தின் நடு ஓவர்களில் விக்கெட்டுகளை கைப்பற்றும் அணியே வெற்றி பெறும். ஆடுகளத்தில் பந்தின் பவுன்ஸ் நன்றாக இருந்தால் எனக்கு விக்கெட் கீப்பிங் செய்ய மிகவும் பிடிக்கும். ஆடுகளம் தோய்வாக இருந்தால்தான் விக்கெட் கீப்பிங் செய்வது மிகவும் கடினம். விக்கெட் கீப்பிங் திறமையை நான் இன்று வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை