வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், மூன்று போட்டிகள் கொன ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒருவெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்துள்ளன. 

Advertisement

இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டியானது செயின்ட் கிட்ஸில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு தன்ஸித் ஹசன் மற்றும் சௌமியா சர்க்கார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சௌமியா சர்க்கார் 19 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் லிட்டன் தாஸும் 2 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

Advertisement

அதன்பின் சௌமீயா சர்காருடன் இணைந்த கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் கடந்த தன்ஸித் ஹசன் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 60 ரன்களைச் சேர்த்த கையோடு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அஃபிஃப் ஹொசைனும் 28 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். இதற்கிடையில் அணியின் கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியிருந்தார். அதன்பின் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 74 ரன்களை எத்த கையோடு மெஹிதி ஹசன் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

பின்னர் மஹ்முதுல்லா - ஜக்கார் அலியும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இதில் ஜக்கார் அலி 48 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதத்தை தவறவிட்டாலும், மறுபக்கம் இறுதிவரை களத்தில் இருந்த மஹ்முதுல்லா 50 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம், வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 294 ரன்களைக் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன்பின் சவாலான இலக்கை நோக்கி விளையாடிய விண்டீஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. 

அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பிராண்டன் கிங் 9 ரன்களிலும், எவின் லூயிஸ் 16 ரன்களிலும், கேசி கார்டி 21 ரன்களிலும் என சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இணைந்த ஷாய் ஹோப் மற்றும் ஷெஃபேன் ரூதர்ஃபோர்ட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், அணியையும் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் சிறப்பாக விளையாடிய சாய் ஷோப் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 86 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஷெஃபேன் ரூதர்ஃபோர்ட் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், அணியின் வெற்றியையும் உறுதி செய்தார். பின் 7 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 113 ரன்களைச் சேர்த்த நிலையில் ரூதர்ஃபோர்ட் ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதியில் சிறப்பாக விளையாடிய ஜஸ்டின் க்ரீவ்ஸ் 41 ரன்களைச் சேர்க்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 47.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த போட்டியில் சதமடித்த ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News