WI vs AUS, 1st Test: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் சாம் கொன்ஸ்டாஸ், கேமரூன் க்ரீன், ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்துள்ளனர். 

Advertisement

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியானது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று (ஜூன் 25) பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா மற்றும் சாம் கொன்ஸ்டாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.

Advertisement

இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம் கொன்ஸ்டாஸ் 3 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேமரூன் க்ரீன் 3 ரன்களை மட்டுமே எடுத்த நிலையிலும் ஷமார் ஜோசப் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து இப்போட்டியில் வாய்ப்பு பெற்ற ஜோஷ் இங்கிலிஸும் 5 ரன்களை மட்டுமே சேர்த்த கையோடு ஜெய்டன் சீல்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 22 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியாது. 

Also Read: LIVE Cricket Score

பின்னர் உஸ்மான் கவாஜாவுடன் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி முதல் நாள் உணவு இடைவேளையின் போது 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 65 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் உஸ்மான் கவாஜா 32 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தாரப்பில் ஷமார் ஜோசப் 2 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News