1st Test, Day 1: ஷுப்மன், யஷஸ்வி அபார சதம்; ரன் குவிப்பில் இந்திய அணி!

Updated: Fri, Jun 20 2025 23:09 IST
Image Source: Google

ENG vs IND, 1st Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் சதமடித்து அசத்தியுள்ளனர். 

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் ப்போட்டியானது ஹெடிங்க்லேவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் ஆரம்பம் முதலே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

பின்னர் இப்போட்டியில் பொறுப்புடன் விளையாடி வந்த கேஎல் ராகுல் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 பவுண்டரிகளுடன் 42 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனைத்தொடர்ந்து தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய சாய் சுதர்ஷன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 5அவது சதத்தைப் பதிவுசெய்த கையோடு 16 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 101 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ரிஷப் பந்த்தும் வழக்கம் போல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஷுப்மன் கில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 6ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். அதேசமாயம் ரிஷப் பந்தும் தந்து அரைசதத்தைப் பூர்த்தி செய்து மிரட்டினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் மைத்தனர். 

Also Read: LIVE Cricket Score

இதன்மூலம் இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 359 ரன்களைக் குவித்துள்ளது. இந்திய அணி தரப்பில் கேப்டன் ஷுப்மன் கில் 127 ரன்களுடனும், துணைக்கேப்டன் ரிஷப் பந்த் 65 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தராப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை