1st Test, Day 2: வெஸ்ட் இண்டீஸ் 190 ரன்னில் ஆல் அவுட்; மீண்டும் தடுமாறும் ஆஸ்திரேலியா!

Updated: Fri, Jun 27 2025 10:30 IST
Image Source: Google

WI vs AUS, 1st Test: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 190 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து வரும் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 25ஆம் தேதி முதல் பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 59 ரன்களையும், உஸ்மான் கவாஜா 47 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற, அந்த அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்பாடுத்திய ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஷமார் ஜோசப் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப் 48 ரனக்ளையும், கேப்டன் ரோஸ்டன் சேஸ் 44 ரன்களையும், பிராண்டன் கிங் 26 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 190 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் மற்றும் பியூ வெப்ஸ்டர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 10 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. 

பின்னர் இரண்டாவாது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் உஸ்மான் கவாஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் உஸ்மான் கவாஜா 15 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து சாம் கொன்ஸ்டாஸ் 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேமரூன் க்ரீன் 15 ரன்னிலும், ஜோஷ் இங்லிஸ் 12 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தன்ர். இதனால் அந்த அணி 65 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் இணைந்த டிராவிஸ் ஹெட் - பியூ வெப்ஸ்டர் இணை அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். 

Also Read: LIVE Cricket Score

இதன் காரணமாக இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 92 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் டிராவிஸ் ஹெட் 13 ரன்களுடனும், பியூ வெப்ஸ்டர் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ், ஷமார் ஜோசப், அல்ஸாரி ஜோசப், ஜஸ்டின் க்ரீவ்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து 82 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை