SL vs BAN, 1st Test: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ சதமடித்த கையோடு 148 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்தும் வரும் வங்கதேச அணி தற்சமயம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த்து. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் ஷாத்மான் இஸ்லாம், அனாமுல் ஹக் மற்றும் மொமினுல் ஹக் உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

Advertisement

பின்னர் இணைந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் முஷ்ஃபிக்கூர் ரஹிம் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தனது 6அவது சர்வதேச டெஸ்ட் சதத்தையும், முஷ்ஃபிக்கூர் ரஹிம் 12ஆவது சர்வதேச டெஸ்ட் சதத்தையும் பூர்த்தி செய்து அசத்தியதுடன், 4ஆவது விக்கெட்டிற்கு 247 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அணியை வலுவான ஸ்கோரை நோக்கி அழைத்துச் சென்றனர். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகளை மட்டுமெ இழந்து 292 ரன்களைக் குவித்திருந்தது.

இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை நஜ்முல் ஹொசைன் சாண்டோ 136 ரன்களுடனும், முஷ்ஃபிக்கூர் ரஹிம் 105 ரன்களுடனும் தொடர்ந்தர். இதில் சிறப்பாகா விளையாடி வந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ 15 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 148 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய லிட்டன் தாஸும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதன்மூலம் வங்கதேச அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 383 ரன்களைச் சேர்த்துள்ளது. 

Also Read: LIVE Cricket Score

இதில் முஷ்ஃபிக்கூர் ரஹிம் 141 ரன்களுடனும், லிட்டன் தாஸ் 43 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி தரப்பில் தரிந்து ரத்நாயக்க மற்றும் அசிதா ஃபெர்னாண்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News