1st Test, Day 2: இரட்டை சதத்தை தவறவிட்ட முஷ்ஃபிக்கூர்; கம்பேக் கொடுக்கும் இலங்கை!

Updated: Wed, Jun 18 2025 20:45 IST
Image Source: Google

SL vs BAN, 1st Test: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்கதேச அணி வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் 163 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்தும் வரும் வங்கதேச அணி தற்சமயம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த்து. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் ஷாத்மான் இஸ்லாம், அனாமுல் ஹக் மற்றும் மொமினுல் ஹக் உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

பின்னர் இணைந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் முஷ்ஃபிக்கூர் ரஹிம் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகளை மட்டுமெ இழந்து 292 ரன்களைக் குவித்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை நஜ்முல் ஹொசைன் சாண்டோ 136 ரன்களுடனும், முஷ்ஃபிக்கூர் ரஹிம் 105 ரன்களுடனும் தொடர்ந்தர். இதில் சிறப்பாகா விளையாடி வந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ 15 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 148 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய லிட்டன் தாஸும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்தது. இதில் லிட்டன் தாஸும் அரைசதம் கடக்க, இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 163 ரன்களைச் சேர்த்த் நிலையில் முஷ்ஃபிக்கூர் ரஹிம் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சதமடிப்பார் என் எதிர்பார்க்கப்பட்ட லிட்டன் தாஸும் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸ்ர் என 90 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வங்கதேச வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

Also Read: LIVE Cricket Score

இதனால் வங்கதேச அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 484 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஹசன் மஹ்முத் - நஹித் ரானா ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி களத்தில் உள்ளனர். இலங்கை அணி தரப்பில் இலங்கை அணி தரப்பில் தரிந்து ரத்நாயக்க, பிரியானந்த் ரத்நாயக்க மற்றும் அசிதா ஃபெர்னாண்டோ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை