ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று (ஜனவரி 29) கலேவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் உஸ்மான் கவாஜா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 92 ரன்கள்பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.   அதன்பின் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கவாஜாவுடன் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.

Advertisement

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் தங்கள் சதங்களையும் பதிவுசெய்து அசத்தினர்.  இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 330 ரன்களைக் குவித்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை உஸ்மான் கவாஜா 147 ரன்களுடனும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 104 ரன்களுடனும் தொடர்ந்தனர். இன்றைய ஆட்டத்திலும் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் ஸ்டீவ் ஸ்மித் 12 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 141 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் ஜோஷ் இங்கிலிஸும் அதிரடியாக விளையாட அணியின் ரன் வேகமும் அதிகரித்தது. அதேசமயம் இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 16 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 232 ரன்களை எடுத்த கையோடு கவாஜா ஆட்டமிழந்த நிலையில், மறுமுனையில் விளையாடிய ஜோஷ் இங்கிலிஸ் தனது அறிமுக ஆட்டத்திலேயே சதம் விளாசிய கையோடு 102 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் அலெக்ஸ் கேரி 46, வெப்ஸ்டர் 23, மிட்செல் ஸ்டார்க் 19 ரன்களைச் சேர்த்தனர். 

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 654 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா மற்றும் ஜெஃப்ரி வண்டர்சே ஆகியோர் தலா 3 விகெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு திமுத் கருணரத்னே - ஒஷாதா ஃபெர்னாண்டோ இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஒஷாதா ஃபெர்னாண்டோ மற்றும் திமுத் கருணரத்னே இருவரும் தலா 7 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸும் 7 ரன்களுடன் நடையைக் கட்டினார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அதன்பின் ஜோடி சேர்ந்துள்ள தினேஷ் சண்டிமால் - கமிந்து மெண்டிஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதில் தினேஷ் சண்டிமால் 9 ரன்களுடனும், கமிந்து மெண்டிஸ் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், மேத்யூ குஹ்னேமன் மற்றும் நாதன் லையன் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து 610 ரன்கள் பின் தங்கிய நிலையில் இலங்கை அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News