WI vs AUS, 1st Test: வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி தடுமாறிய நிலையில் டிராவிஸ் ஹெட் - பியூ வெப்ஸ்டர் இணை அணியை சரிலிருந்து மீட்டுள்ளனர். 

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 25ஆம் தேதி முதல் பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 59 ரன்களையும், உஸ்மான் கவாஜா 47 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற, அந்த அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்பாடுத்திய ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஷமார் ஜோசப் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப் 48 ரனக்ளையும், கேப்டன் ரோஸ்டன் சேஸ் 44 ரன்களையும், பிராண்டன் கிங் 26 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 190 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் மற்றும் பியூ வெப்ஸ்டர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 10 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. 

பின்னர் இரண்டாவாது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா 15 ரன்களுக்கும், சாம் கொன்ஸ்டாஸ் 5 ரன்களுக்கும், கேமரூன் க்ரீன் 15 ரன்களுக்கும், ஜோஷ் இங்லிஸ் 12 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதன் காரணமாக இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 92 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை டிராவிஸ் ஹெட் 13 ரன்களுடனும், பியூ வெப்ஸ்டர் 19 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் அரைசதம் கடந்து அசத்தினார். 

Also Read: LIVE Cricket Score

மேற்கொண்டு இருவரும் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் டிராவிஸ் ஹெட் 61 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் நிதானமாக விளையாடி வரும் பியூ வெப்ஸ்டர் அரைசதத்தை நெருக்கி வருகிறார். இதன்மூலம் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் பியூ வெப்ஸ்டர் 49 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாகா ஷமார் ஜோசப் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News