தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். 

Advertisement

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தா அணியில் காம்ரன் குலாம் அரைசதம்  கடந்த நிலையில் மற்ற வீரர்கள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாஅமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் ஓரளவு தாக்குப்பிடித்து 54 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டும், கார்பின் போஷ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஐடன் மார்க்ரம், கார்பின் போஷ் ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர். 

Advertisement

இதனால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 301 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 89 ரன்களையும், அறிமுக வீரர் கார்பின் போஷ் 81 ர்னகளையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் குர்ராம் ஷஷாத் மற்றும் நசீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், அமீர் ஜமால் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  இருப்பினும் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 90 ரன்கள் முன்னிலைப் பெற்றது. பின்னர் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தது. 

இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்களை மட்டுமே எடுத்தது. இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை பாபர் ஆசாம் 16 ரன்களுடனும், சௌத் ஷகீல் 8 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடங்கினர். இதில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தின்ர். அதன்பின் 50 ரன்கள் எடுத்த கையோடு பாபர் ஆசாம் விக்கெட்டை இழக்க, இறுதிவரை விளையாடிய சௌத் சகீல் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 84 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். 

அவர்களைத் தவிர்த்து மற்ற வீரர்களில் அமர் ஜமால் 18 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து அனைவரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 237 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மார்கோ ஜான்சென் 6 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு 148 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் டோனி டி ஸோர்ஸி 2 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரியான் ரிக்கெல்டன் ரன்கள் ஏதுமின்றியும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 27 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. இதில் ஐடன் மார்க்ரம் 22 ரன்களுடனும், டெம்பா பவுமா ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது அபாஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து தென் ஆப்பிரிக்க அணி கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ள நிலையில் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News