SL vs BAN, 1st Test: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.

Advertisement

இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் முஷ்ஃபிக்கூர் ரஹிம் அகியோர் அபாரமான ஆட்டத்தின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 495 ரன்களைக் குவித்தது. இதில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 148 ரன்களையும், முஷ்ஃபிக்கூர் ரஹிம் 163 ரன்களையும், லிட்டன் தாஸ் 90 ரன்களையும் சேர்த்தனர்.இலங்கை அணி தரப்பில் அசித்த ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், தரிந்து ரத்நாயக்க, பிரியானந்த் ரத்நாயக்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் பதும் நிஷங்கா 187 ரன்களையும், தினேஷ் சண்டிமல் 54 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 39 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த குசால் மெண்டிஸ் மற்றும் கேப்டன் தனஞ்செயா டி சில்வா இணை ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதன் காரணமாக மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 368 ரன்களைச் சேர்த்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய 4ஆம் நாள் ஆட்டத்தை கமிந்து மெண்டிஸ் 37 ரன்களுடனும், தனஞ்செய டி சில்வா 17 ரன்களுடனும் தொடர்ந்தனர். 

இதில் தனஞ்செயா டி சில்வா 19 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் 5 ரன்னிலும், ரத்நாயக்க 39 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து அசத்திய கமிந்து மெண்டிஸ் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 87 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 485 ரன்களில் ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் நயீன் ஹசன் 5 விக்கெட்டுகளையும், ஹசன் மஹ்முத் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

அதன்பின் 10 ரன்கள் முன்னிலையுடன் இராண்டவாது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியில் அனமூல் ஹக் 4 ரன்களிலும், மொமினுல் ஹக் 14 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஷாத்மான் இஸ்லாம் - கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஷாத்மான் இஸ்லாம் அரைசதம் கடந்து அசத்தினார். பின்னர் இருவரும் இணைந்து 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஷாத்மன் இஸ்லாம் 76 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Also Read: LIVE Cricket Score

Advertisement

பின்னர் நஜ்முல் ஹொசைன் சாண்டோவுடன் இணைந்த முஷ்ஃபிக்கூர் ரஹிம் அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகிறார். இதன் காரணமாக வங்கதேச அணி 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் நஹ்முல் ஹொசைன் சாண்டோ 56 ரன்களுடனும், முஷ்ஃபிக்கூர் ரஹிம் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா, தரிந்து ரத்நாயக்க, பிரியானந்த் ரத்நாயக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதையடுத்து 187 ரன்கள் முன்னிலையுடன் வங்கதேச அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News