இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைத்ராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டின் செய்த இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 246 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெஸ்வா, கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரது அரைசதங்கள் மூலமாக 436 ரன்களைக் குவித்து, முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் - ஸாக் கிரௌலி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அசத்தினர்.

Advertisement

இதில் அதிரடியாக விளையாடி வந்த ஸாக் கிரௌலி 31 ரன்களிலும், பென் டக்கெட் 47 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதையடுத்து களமிறங்கிய் ஒல்லி போப் ஒருபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் களமிறங்கிய ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒல்லி போப் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

 இதற்கிடையில் பென் ஃபோக்ஸ் 34 ரன்களைச் எடுத்த நிலையி விக்கெட்டை இழந்தாலும், 6ஆவது விக்கெட்டிற்கு 112 ரன்கள் பார்ட்னஷிப் அமைத்து அணியை முன்னிலைப்படுத்த உதவினா. இதனால் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தில் ஒல்லி போப் 148 ரன்களுடனும், ரெஹான் அஹ்மத் 16 ரன்களுடனும் தொடர்ந்தனர். 

இதில் ஒல்லி போப் 150 ரன்களை கடக்க, மறுபக்கம் ரெஹான் அஹ்மத் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய டாம் ஹார்ட்லி தனது பங்கிற்கு 34 ரன்களைச் சேர்த்து உதவினார். இறுதியில் இப்போட்டியில் இரட்டை சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒல்லி போப் 21 பவுண்டரிகளுடன் 196 ரன்கள் எடுத்த நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனால் இங்கிலாந்து அணி நான்காம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இரண்டாவது இன்னிங்ஸில் 420 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல அவுட்டானது. இந்திய அணி தரப் ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 231 ரன்கள் என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News