ENG vs IND, 1st Test: ஹெடிங்லேவில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த், கேஎல் ராகுல் ஆகியோரின் சதத்தின் மூலம் இந்திய அணி 371 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. 

Advertisement

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 147 ரன்களையும், துணைக்கேப்டன் ரிஷப் பந்த் 134 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்களையும் சேர்த்திருந்தனர். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தராப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஷ் டங்க் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Advertisement

இதனையடுத்து  முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஒல்லி போப் 106 ரன்களுடனும், சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹாரி புரூக் 99 ரன்களிலும், பென் டக்கெட் 64 ரன்களிலும் என ஆட்டமிழக்க அந்த அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 465 ரன்களில் அல் அவுட்டானது.இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளையும், பிரஷித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 6 ரன்கள் முன்னிலை பெற்றது. 

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும், சாய் சுதர்ஷன் 30 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 90 ரன்களைச் சேர்த்திருந்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை இதில் கேஎல் ராகுல் 47 ரன்களுடனும், ஷுப்மன் கில் 6 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில் 8 ரன்களுடன் நடையைக் கட்ட, மறுபக்கம் கேஎல் ராகுல் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். 

மேலும் ராகுலுடன் இணைந்த ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இதில் கேஎல் ராகுல் 9ஆவது சதத்தையும், ரிஷப் பந்த் 8ஆவது சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 15 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 118 ரன்களில் ரிஷப் பந்தும், 18 பவுண்டரிகளுடன் 137 ரன்களைச் சேர்த்த நிலையில் கேஎல் ராகுலும் ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் இந்திய அணி 364 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜோஷ் டங் மற்றும் பிரைடன் கார்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

Also Read: LIVE Cricket Score

Advertisement

இதன் கரணமாக இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து இலக்கை நோக்கி விலையாடி வரும் இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் - ஸாக் கிரௌலி இணை தொடக்கம் கொடுத்தனர். இந்த இன்னிங்ஸில் ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் ஸாக் கிரௌலி 12 ரன்களுடனும், பென் டக்கெட் 09 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனையடுத்து 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி நளை கடைசி நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News