ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Advertisement

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பையின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்  செய்வதாக தீர்மானித்து களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு கவாஜா மற்றும் வார்னர் இருவரும் 50 ரன்கள் சேர்த்தனர். வார்னர் 15 ரன்கள் எடுத்து ஷமி பந்தில் ஆட்டம் இழந்தார். பின்னர் உள்ளே வந்த லபுஜானே 18 ரன்கள் அடித்திருந்தபோது அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யூ டபிள்யூ ஆகி வெளியேறினார்.

Advertisement

அஸ்வினின் அதே ஓவரில் ஸ்மித் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழக்க, உணவு இடைவேளைக்கு முன்பு வரை 94 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா அணி சற்று தடுமாறியது. கவாஜா அரைசதம் மற்றும் டிராவிஸ் ஹெட் ஒரு ரன்னுடன் களத்தில் நின்றனர்.

உணவு விடுவிகளுக்கு பின்பு வந்த டிராவிஸ் ஹெட் 12 ரன்கள் ஆட்டம் இழந்தார். மிகச் சிறப்பாக விளையாடிவந்த தொடக்க வீரர் கவாஜா 81 ரன்கள் இருந்தபோது, ஜடேஜாவின் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் அடித்தார். ஸ்கொயர் திசையில் நின்ற கேஎல் ராகுல் அதை பாய்ந்து பிடித்து அசத்தினார். அடுத்ததாக உள்ளே வந்த அலெக்ஸ் கேரி ரன் ஏதும் எடுக்காமல் அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார். 

பின்னர் வந்த பாட் கம்மின்ஸ் 33 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி முதல் நாள் ஆட்டம் முடிவதற்குள்ளாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்கம் தந்தனர். தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் விக்கெட் இழக்காமல் இன்றைய நாளை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

Advertisement

இதன்மூலம் முதல்நால் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ரோஹித் சர்மா 13 ரன்களுடனும், கேஎல் ராகுல் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 242 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி நாளை 2ஆம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News