WI vs AUS, 1st Test: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும், ரோஸ்டன் சேஸ் - ஷாய் ஹோப்பின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் முன்னிலை நோக்கி நகர்ந்து வருகிறது.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (ஜூன் 25) பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 59 ரன்களையும், உஸ்மான் கவாஜா 47 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற, அந்த அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்பாடுத்திய ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஷமார் ஜோசப் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்கள் கிரேய்க் பிராத்வைட் 4 ரன்னிலும், ஜான் காம்பெல் 7 ரன்னிலும் என அடுத்தடுத்து மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர்.  அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அறிமுக வீரர் பிராண்டன் கிங் ஒருபக்கம் ரன்களை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட, மறுபக்கம் கேசி கார்டி 20 ரன்களுக்கும், ஜொமல் வாரிக்கன் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதன் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்களைச் சேர்த்தது.

இந்நிலையில் இன்று தொடங்க்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை பிராண்டன் கிங் 23 ரன்களுடனும், ரோஸ்டன் சேஸ் ஒரு ரன்னுடனும் தொடர்ந்தனர். இதில் பிராண்டன் கிங் 26 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு பெவிலியன் திரும்பினார். அதன்பின் ரோஸ்டன் சேஸுடன் இணைந்த ஷாய் ஹோப் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார். இதில் இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்ததுடன் வெஸ்ட் இண்டீஸ் அணியனது முதல் இன்னிங்ஸில் முன்னிலை நோக்கி நகர்ந்து வருகிறது. 

Also Read: LIVE Cricket Score

அதன்படி இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது வெஸ்ட் இண்டீஸ் அணியானது 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் கேப்டன் ரோஸ்டன் சேஸ் 44 ரன்களுடனும், ஷய ஹோப் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஜேசில்வுட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து 45 ரன்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸைத் தொடரவுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News