SL vs BAN, 2nd Test: கொழும்புவில் நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி தொடக்க வீரர் பதும் நிஷங்கா சதமடித்ததுடன் 158 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தர். 

Advertisement

இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் உள்ள சிங்கள ஸ்போர்ட் கிளப் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் அதிகபட்சமாக ஷாத்மான் இஸ்லாம் 46 ரன்களையும், முஷ்ஃபிக்கூர் ரஹிம், 35 ரன்களையும், லிட்டன் தாஸ் 34 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில்  247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அசிதா ஃபெர்னாண்டோ மற்றும் சோனல் தினுஷா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

Advertisement

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் லஹிரு உதாரா சிறப்பான தொடக்கத்தை வழங்கியதுடன் முதல் விக்கெட்டிற்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். பின் 40 ரன்கள் எடுதிருந்த லஹிரு உதாரா விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தினேஷ் சண்டிமால் சிறப்பான ஆட்டத்தாஇ வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பதும் நிஷங்கா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தானது 5அவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

பின்னர் சதத்தை நெருங்கிய தினேஷ் சண்டிமால் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 93 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதன் காரணமாக இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 290 ரன்களைச் சேர்த்துள்ளது. இதனையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை பதும் நிஷங்கா 146 ரன்களுடனும், பிரபாத் ஜெயசூர்யா 5 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் 19 பவுண்டரிகளுடன் 158 ரன்களை எடுத்திருந்த நிலையில் நிஷங்காவும், 10 ரன்களில் ஜெயசூர்யாவும், 7 ரன்களில் தனஞ்செயாவும் 33 ரன்களில் கமிந்து மெண்டிஸும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

Also Read: LIVE Cricket Score

இதன் காரணமாக இலங்கை அணி மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது 6 விக்கெட்டுகளை இழந்து 401 ரன்களைச் சேர்த்துள்ளடு. இதில் குசால் மெண்டிஸ் 42 ரன்களுடனும், சோனல் தினுஷா 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும், நயீம் ஹசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து 154 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை அணி முதல் இன்னிங்ஸைத் தொடரவுள்ளடு. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News