ஆஸ்திரேலியா எங்களை விட சிறப்பாக விளையாடியது - ரோஹித் சர்மா!

Updated: Sun, Dec 08 2024 12:30 IST
ஆஸ்திரேலியா எங்களை விட சிறப்பாக விளையாடியது - ரோஹித் சர்மா!
Image Source: Google

ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததுடன் 180 ரன்களில் அல் அவுட்டானது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 337 ரன்களை குவித்தது.

அதன்பின் 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா அணியில் நிதீஷ் ரெட்டி 42 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தவிர்த்து வேறெந்த வீரரும் ரன்களைச் சேர்க்கவில்லை. இதனால் இந்திய அணி 175 ரன்களில் ஆல் அவுட்டானதுடன், ஆஸ்திரேலிய அணிக்கு 19 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதன்படி இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் சதமடித்து அசத்திய டிராவிஸ் ஹெட் இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதினை வென்றார். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற டிசம்ப 14 ஆம் தேதி பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய ரோஹித் சர்மா, “இது எங்களுக்கு மிகவும் ஏமாற்றமான வாரம், நாங்கள் ஆட்டத்தை வெல்லும் அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை, ஆஸ்திரேலியா எங்களை விட சிறப்பாக விளையாடியது. இந்த போட்டியில் நாங்கள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தது,ஆனால் அதனை நாங்கள் பயன்படுத்த தவறிவிட்டோம்.  அது எங்களுக்கு ஆட்டத்தை இழக்கச் செய்தது.

பெர்த் மைதானத்தில் நாங்கள் விளையாடியது சிறப்பானதாக அமைந்தது. அதனால் நாங்கள் இங்கு வந்து அதை மீண்டும் செய்ய விரும்பினோம் ஆனால் ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் அதன் சொந்த சவால் உள்ளது. இளஞ்சிவப்பு பந்தில் அது சவாலாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். நான் சொன்னது போல், ஆஸ்திரேலியா எங்களை விட சிறப்பாக செயல்பட்டு இந்த போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

இதனையடுத்து அடுத்த டெஸ்ட் போட்டிக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இப்போட்டிக்க்கு இடையில் அதிக நேரம் இல்லை. அதனால் நாங்கள் பெர்த்தில் என்ன் செய்தோம், அடிலெய்டில் என்ன செய்தோம் என்பது குறித்து ஆலோசிக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு டெஸ்ட் போட்டியின் சவால்களையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். நாங்கள் நன்றாக தொடங்கி நன்றாக விளையாட விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை