2nd Test: பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!

Updated: Mon, Oct 14 2024 22:38 IST
Image Source: Google

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நாடைபெறவுள்ளது இதில் பாகிஸ்தான் அணியானது ஏற்கனவே முதல் போட்டியில் அடைந்த படுதோல்விக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்கிறது. அதேசமயம் இங்கிலாந்து அணியோ அபார வெற்றிக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்கிறது. இப்போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்று.

மேலும், பாகிஸ்தான் அணியானது தொடரை இழக்காமல் இருக்க இப்போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இரு அணிகளின் பிளேயிங் லெவனையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. 

அதன்படி இங்கிலாந்து அணியில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். அவருடன் இணைந்து மேத்யூ பாட்ஸுக்கு இப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய கஸ் அட்கின்சன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோருக்கு இப்போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி மீதமுள்ள வீரர்கள் அனைவரும் தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர். 

இதுதவிர பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரையில் அறிமுக வீரர் காம்ரன் குலாமிற்கு இப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு நோமன் அலி, சஜித் கான், ஸாஹித் மஹ்மூத் என மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிள்ளது. இருப்பினும் பாபர் ஆசாம், ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் நஷீம் சஹா உள்ளிடோர் அணியில் இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜாக் கிராலி, பென் டக்கெட், ⁠ஒல்லி போப், ⁠ஜோ ரூட், ⁠ஹாரி புரூக்,⁠ பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்),⁠ ⁠ஜேமி ஸ்மித், பிரைடன் கார்ஸ், ⁠மாட் பாட்ஸ், ⁠ஜாக் லீச், ஷோயப் பஷீர்

Also Read: Funding To Save Test Cricket

பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: சைம் அயூப், அப்துல்லா ஷபீக், ஷான் மசூத் (கேப்டன்), காம்ரன் குலாம், சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான், சல்மான் அலி ஆகா, அமீல் ஜமால், நோமன் அலி, சஜித் கான், ஸாஹித் மஹ்மூத்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை