ரோஹித் சர்மாவுக்கு பதில் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள 3 வீரர்கள்!

Updated: Fri, Feb 28 2025 16:10 IST
Image Source: Google

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. 

அதேசமயம் தொடரை நடத்தும் பாகிஸ்தான், வங்கதேச மற்றும் இங்கிலாந்து அணிகள் லீக் சுற்று இத்தொடரை விட்டு வெளியேறியுள்ளன. அதேசமயம் மீதமுள்ள அரையிறுதி இடங்களுக்கான போட்டியில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதிலிருந்து எந்த இரு இரண்டு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

அதேசமயம் இந்திய அணி தங்களுடைய கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்தை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் இருந்து மோசமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா காயமடைந்திருப்பதாகவும், இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டில் ஓய்வளிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ரோஹித் சர்மா இல்லாத நிலையில் இந்திய அணியை ஷுப்மன் கில் வழிநடத்துவார். அதேசமயம் இப்போட்டியில் ரோஹித் சர்மா விளையாடாத பட்சத்தில், அவருக்கு பதிலாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

ரிஷப் பந்த்

நியூசிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ரிஷப் பந்த் களமிறங்குவதற்கு அதிகபடியான வாய்ப்புகள் உள்ளன. இந்திய அணிக்காக இதுவரை 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பந்த், ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்கள் என 33.50 என்ற சராசரியுடன் 871 ரன்களைச் சேர்த்துள்ளார். மேலும் இவர் இடது கை மிடில் ஆர்டர் பேட்டர் என்பதால் இவர் லெவனில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.

வாஷிங்டன் சுந்தர்

அவரைத்தவிர்த்து இந்திய அணியின் அடுத்த தேர்வாக இளம் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதுவரை இந்திய அணிக்காக 23 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் 329 ரன்கள் மற்றும் பந்துவீச்சில் 24 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் இவரால் புதிய பந்திலும் பந்துவீச முடியும் என்பதால் இவர் இடம்பெறாவும் அதிக வாய்ப்புள்ளது. 

அர்ஷ்தீப் சிங்

Also Read: Funding To Save Test Cricket

ஒருவேளை இந்திய அணி பந்துவீச்சாளர் பக்கம் திரும்பினால் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் தற்போதுள்ள இந்திய அணி வலிமையான பேட்டிங் ஆர்டரைக் கொண்டுள்ளது. மேற்கொண்டு அதில் மூன்று ஆல்ரவுண்டர்களும் உள்ளனர். இதன் காரணமாக இப்போட்டியில் அர்ஷ்தீப் சிங் இடம்பெறுவது இந்திய அணியின் பந்துவீச்சு துறையை வலிமைப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை