ஐபிஎல் 2025: மார்கோ ஜான்சனுக்கு பதிலாக இடம்பெற வாய்ப்புள்ள 3 வீரர்கள்!

Updated: Thu, May 29 2025 14:35 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பேற்றிருந்த இத்தொடரில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவுள்ளன

இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில்  பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மார்கோ ஜான்சென் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளதன் காரணமாக நாடு திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை அவர் நாடு திரும்பும் பட்சத்தில் அவருக்கான மாற்று வீரர்கள் யார் என்பது குறித்து பார்ப்போம். 

அஸ்மதுல்லா ஒமர்ஸாய்

இந்தப் பட்டியலில், பஞ்சாப் கிங்ஸ் லெவனில்  இல் மார்கோ ஜான்சனுக்கு சரியான மாற்றாக அஸ்மதுல்லா ஒமர்ஸாய் பெயரை முதலிடத்தில் இருக்கும். இந்த ஆஃப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி அதில் 5 விக்கெட்டுகளையும், 38 ரன்களையும் சேர்த்துள்ளார்.இதுதவிர்த்து அவர் 126 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார், அதில் அவர் 1314 ரன்களையும் 111 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சேவியர் பார்ட்லெட்

இந்த பட்டியலில் அடுத்த இடத்தை பெறுபவர் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் சேவியர் பார்ட்லெட். இவர் இதுவரை 68 டி20 போட்டிகளில் 82 விக்கெட்டுகளை எடுத்துள்ளார், அதே நேரத்தில் ஐபிஎல் 2025 இல் அவர் 4 போட்டிகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த 26 வயதான பந்து வீச்சாளர் ஆஸ்திரேலியாவுக்காக 7 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி, அதில் அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரோன் ஹார்டி

Also Read: LIVE Cricket Score

இந்த பட்டியலில் அடுத்த இடத்தைப் பிடிப்பவர் ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டர் ஆரோன் ஹார்டி. அவர் இதுவரை 84 டி20 போட்டிகளில் விளையாடி அதில் அவர் 1464 ரன்களையும், 41 விக்கெட்டுகளையும் கைப்பற்றிவுள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவுக்காக 13 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 128 ரன்களையும் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இருப்பினும் அவர் இதுவரை எந்தவொரு ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை