ENG vs WI: பில் சால்ட் இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் அதிரடி நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதேசமயம் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த பில் சால்ட் குழந்தை பிறப்பு காரணமாக இந்த தொடரிலிருந்து விலகிவுள்ளார். இதனால் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரராக யார் களமிறங்குவார் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் பில் சால்ட்டிற்கு பதிலாக இங்கிலாந்து அணியின் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
ஜோஸ் பட்லர்
இந்தப் பட்டியலில் முதலில் இருப்பவர் ஜோஸ் பட்லர். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனாக இவர், இதுவரை 134 சர்வ்தேச டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை கொண்டுள்ளார். மேலும் இவர் உலகம் முழுவதிலும் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் விளையாடிய அனுபவத்தையும் கொண்டுள்ளார். அந்தவகையில் அவர் டி20 வடிவத்தில் 448 போட்டிகளில் விளையாடி 12,651 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிரடி தொடக்க வீரராக அறியப்படும் ஜோஸ் பட்லர் மீண்டும் இங்கிலாந்து அணிக்காக தொடக்க வீரர் இடத்தில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வில் ஜாக்ஸ்
இந்தப் பட்டியலில் அடுத்த இடத்தைப் பிடிப்பவர் வில் ஜேக்ஸ். தற்போது 26 வயதான இந்த ஆல்ரவுண்டர் இங்கிலாந்து அணிக்காக இதுவரை 23 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி அதில் 383 ரன்களை எடுத்துள்ளார். மேலும் உலகெங்கிலும் நடைபெறும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வரும் அவர் இதுவரை 215 போட்டிகளில் 5,323 ரன்கள் எடுத்துள்ளார். மேற்கொண்டு அவரால் பந்துவீச்சிலும் அணிக்கு தனது பங்களிப்பை செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டாம் பான்டன்
Also Read: LIVE Cricket Score
இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மூன்றாவது வீரர் டம் பாண்டன். இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்டர்களில் ஒருவராக அறியப்படும் பாண்டன் இதுவரை 14 சர்வதேச டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக விளையாடிவுள்ளார். அதேசமயம் டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் 165 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், அதில்4 சதங்கள் மற்றும் 24 அரைசதங்களை விளாசியதுடன் 4,255 ரன்களையும் எடுத்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.