தேநீர் இடைவேளைக்கு முன் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருந்தது: டேரில் மிட்செல்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், வில் யங் மற்றும் டேரில் மிட்செலின் அரைசதங்கள் அடித்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இதனால் நியூசிலாந்து அணியானது முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 82 ரன்களையும், வில் யங் 71 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ரோஹித் சர்மா 18 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் இணைந்த ஷுப்மன் கில் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 30 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய முகமது சிராஜ் ரன்கள் ஏதுமின்றியும், விராட் கோலி 4 ரன்னில் நடையைக் கட்டினார். இதனால் முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 86 ரன்களை எடுத்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய போட்டி குறித்து பேசிய டேரில் மிட்செல், "வில் யங்குடனும் இணைந்து பேட்டிங் செய்த போது மதிய உணவிற்குப் பிறகு முதல் ஒரு மணிநேரம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது என்று நான் நினைக்கிறேன். அதனால் களத்தில் மிகவும் சூடாக இருந்தது. நாங்கள் மட்டுமின்றி இந்திய அணி வீரர்களும் வெயிலின் தாக்கத்தால் போராடுவதாக கூறியதையும் நீங்கள் காணலாம். அதிகபடியான வெப்பம் கரணமாக களத்தில் ரன்களுக்காக ஓடும் போது மூச்சு விடவும் கடினமாக இருந்தது.
Also Read: Funding To Save Test Cricket
அதனால் நான் மூச்சு விடுவதில் கவனம் செலுத்து என உடல் வெப்பநிலையை சமநிலை படுத்த முயற்சித்தேன். வெளிப்படையாக கூற வேண்டும் எனில் நேற்றைய தினத்தில் அந்த தேநீர் இடைவேளை எங்களுக்கு மிகவும் நல்லதாக இருந்தது. ஏனெனில் அச்சமயம் நான் பனிக்கட்டியில் குளியலில் சுமார் 10 நிமிடங்கள் அங்கேயே அமர்ந்திருந்தேன், அதன் பிறகே நான் நன்றாக இருப்பதாக உணர்ந்தேன்” என்று கூறியுள்ளார்.