இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (நவம்பர் 1) மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தார்.

Advertisement

இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் டாம் லேதம் மற்றும் டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவான் கான்வே 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் டாம் லேதமுடன் இணைந்த வில் யங் பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசி ஸ்கோரையும் உயர்த்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

Advertisement

அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் டாம் லேதம் 28 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திராவும் 5 ரன்கள் மட்டுமே எடுத்த கையோடு அடுத்தடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் இணைந்த வில் யங் - டேரில் மிட்செல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். அதான்பின் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். 

பின்னர் இருவரும் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வில் யங் 71 ரன்களிலும், டேரில் மிட்செல் 82 ரன்களிலும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளியும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர்.

இருவரும் அதிரடியாக தொடங்கிய நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா 18 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த யஷ்ஸ்வி - ஷுப்மன் கில் இணை நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் முதல்நாள் ஆட்டம் முடிய சில ஓவர்கள் மட்டுமா இருந்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 30 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய முகமது சிராஜும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய விராட் கோலியும் 4 ரன்களை எடுத்த நிலையில், ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதனால் இந்திய அணி முதால்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் ஷுப்மன் கில் 31 ரன்களுடனும், ரிஷப் பந்த் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணி தரப்பில் அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளையும், மேட் ஹென்றி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து 149 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News