இவர்கள் சிறப்பாக செயல்பட்டதுதான் வெற்றிக்கு முக்கிய காரணம் - ஸ்டீவ் ஸ்மித்!

Updated: Fri, Mar 03 2023 12:34 IST
3rd Test: Steve Smith Hails Aussie Team After Emphatic Win Over India
Image Source: Google

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று வலுவான நிலையில் இருந்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. 

இதில் ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் சற்று பின்தங்கிய நிலையில் இருந்தாலும், இந்த வெற்றியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இப்போட்டி முடிந்தப் பிறகு பேசிய ஆஸ்திரேலிய அணிக் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், “முதல் நாளில் டாஸை இழந்தப் பிறகு, எங்கள் அணி பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக, குன்னேமான் முதல்நாள் முதல் செஷனில் சிறப்பாக செயல்பட்டதுதான் வெற்றிக்கு முக்கிய காரணம். குழுவாக எங்களது பௌலர்கள் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள்.

நாதன் லைன் தனது அபார பந்துவீச்சுக்கு பரிசாக 8 விக்கெட்களை பெற்றார். எனக்கு இந்திய காலநிலை குறித்து மிகச்சரியாக தெரியும். ஆகையால், எந்தெந்த நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும் என சுலபமாக திட்டத்தை வகுத்து அதற்கேற்றாற்போல் செயல்பட்டேன். ஆகையால்தான், சுலபமாக வெல்ல முடிந்தது. நான்காவது போட்டியிலும் அதேபோல்தான் திட்டத்தை வகுப்பேன். அபார வெற்றியைப் பெறுவோம். டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறியது மகிழ்ச்சியாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை