ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான 4ஆவது டி20 போட்டியானது இன்று ஹராரேவில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸை வென்ற இந்திய அணி பந்துவீசுவதாக அறிவித்து ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி, களமிறங்கிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக சிக்கந்தர் ரஸா 46 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் கலீல் அஹ்மத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Advertisement

இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்  இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தனர். இதன்மூலம் இந்திய அணி 15.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 3-1 என முன்னிலையில் உள்ளது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 93 ரன்னும், ஷுப்மன் கில் 58 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ரஸா, “இனறைய போட்டிக்கான விக்கெட் சற்று ஈரமாக இருந்தது என்று நினைக்கிறேன். இதில் நாங்கள் 160 ரன்களைச் சேர்த்தால் வெற்றி பெறலாம் என நினைத்தோம். ஆனால் இந்திய அணி பேட்டிங் செய்த விதத்தில் 180 ரன்கள் எடுத்திருந்தால் கூட போதுமானதாக இருக்காது. ஒவ்வொரு விளையாட்டிலிருந்தும் நாங்கள் வளர்ந்து கொண்டே இருக்கிறோம்.

கடைசி 5 ஓவர்களில் 8-10 ரன்கள் அதிகம் என்று நினைக்கிறேன். இந்த பிட்ச்சில் பந்துவீச்சாளர்கள் கொஞ்சம் பவுன்ஸ் கிடைத்தது. எனவே இன்னிங்ஸின் தொடக்கத்தில் நாங்கள் எங்களை கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. இன்னிங்ஸ் இடைவேளையில் ஹெவி ரோலர் பிட்ச்சின் மீது பயன்படுத்தப்பட்ட காரணத்தால் நிலைமை அவர்களுக்கு சாதகாம செயல்பட்டது. இதன் காரணமாக அவர்கள் பேட்டிங் செய்யும் போது அது எளிதாக அமைந்துவிட்டது” என தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News