ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன. மேலும் ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.

Advertisement

இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (டிசம்பர் 26) தொடங்கிய. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தார். மேலும் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஷுப்மன் கில் நீக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்போட்டியில் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராகவும், கேஎல் ராகுல் மூன்றாம் இடத்திலும் களமிறங்கவுள்ளனர். 

Advertisement

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா மற்றும் அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கத்தில் ரன்களைச் சேர்க்க தடுமாறினாலும், அதன்பின் சாம் கொன்ஸ்டாஸ் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பந்துவீச்சாளர்களை அழுத்தத்தில் தள்ளினார். அதிலும் குறிப்பாக ஜஸ்பிரித் பும்ராவுக்கு எதிராக அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி ஆச்சாரியப்படுத்தினார். தொடர்ந்து அதிரடி காட்டிய சாம் கொன்ஸ்டாஸ் 52 பந்துகளில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இதன்மூலம் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் என்ன செய்வதென என தெரியாமல் தடுமாறினர். அதேசமயம் ஆஸ்திரேலிய அணி முதல் விக்கெட்டிற்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தியது. அதன்பின், சாம் கொன்ஸ்டாஸ் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 60 ரன்களை எடுத்திருந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் உஸ்மான் கவாஜாவுடன் இணைந்துள்ள மார்னஸ் லபுஷாக்னேவும் பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து வருவதுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தி வருகின்றனர். 

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் உணவு இடைவேளையின் போது ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 112 ரன்களைக் குவித்துள்ளது. இதில் உஸ்மான் கவாஜா 38 ரன்களுடனும், மார்னஸ் லபுஷாக்னே 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டை கைப்பற்றிய நிலையில், மற்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியுள்ளனர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News