மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய  அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்களைச் சேர்த்தது.

Advertisement

இதில் தனது அறிமுக போட்டியில் விளையாடிய சாம் கொன்ன்ஸ்டாஸ் 65 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 60 ரன்களை எடுத்த நிலையில், உஸ்மான் கவாஜா 6 பவுண்டரிகளுடன் 57 ரன்களையும், மார்னஸ் லாபுஷாக்னே 7 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தனர். அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட் ரன்கள் ஏதுமின்றியும், மிட்செல் மார்ஷ் 4 ரன்களிலும், அலெக்ஸ் கேரி 31 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 

Advertisement

அதன்படி இன்றை தினம் ஸ்டீவ் ஸ்மித் 68 ரன்களுடனும், கேப்டன் பாட் கம்மின்ஸ் 8 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடங்கினர். இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்தொடங்கியது. இப்போட்டியில் அபாரமாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 34அவது சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு இவர்கள் இருவரும் இணைந்து 7ஆவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதனால் இந்திய பந்துவீச்சாளர்கள் இவர்களது பார்ட்னர்ஷிப்பை கட்டுபடுத்த தடுமாறினர். 

அதன்பின் அரைசதத்தை நெருங்கிய பாட் கம்மின்ஸ் 49 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்டார். இதன் காரணமாக இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 454 ரன்களைக் குவித்துள்ளது. இதில் ஸ்டீவ் ஸ்மித் 139 ரன்களுடனும், மிட்செல் ஸ்டார்க் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News