பும்ராவின் காயம் குறித்து அப்டேட் வழங்கிய பிரஷித் கிருஷ்ணா; ரசிகர்கள் ஷாக்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயன ஐந்தாவது டெச்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிரது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 185 ரன்களையும், ஆஸ்திரேலிய அணி 181 ரன்களையும் சேர்த்து ஆல் அவுட்டானது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களைச் சேர்த்துள்ளது.
இந்நிலையில் இன்றைய நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு பின் இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா ஒரு ஓவரை மட்டுமே வீசிய நிலையில் அதன்பின் மேற்கொண்டு ஓவர்கள் ஏதும் வீசாமல் பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் நீண்ட நேரமாகியும் அவர் களத்திற்கு திரும்பாமல் இருந்ததால், அவர் குறித்த கேள்விகள் எழத்தொடங்கின. அதன்பின் அவர் தனது பயிற்சி உடையை அணிந்து அணி ஊழியர்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இதனால் ஜஸ்பிரித் பும்ரா காயமடைந்திருப்பதாகவும், அதற்கான பரிசோதனையை மேற்கொள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா முதுகு பிடிப்பு காரணமாகவே மருத்துவமனைக்கு சென்றார் என்று சக அணி வீரர் பிரஷித் கிருஷ்ணா உறுதிபடுத்தியுள்ளார். இதனால் இந்திய அணி ரசிகர்கள் அதிர்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பிரஷித் கிருஷ்ணா, “ஆம், ஜஸ்பிரித் பும்ராவிற்கு முதுகு பிடிப்பு இருந்தது, அதன் காரணமாகவே அவர் ஸ்கேன் செய்ய மருத்துவமனை சென்றிருந்தார். மேற்கொண்டு இந்திய அணியின் மருத்துவக் குழு அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதனால் மருத்துவமனையில் இருந்து திரும்பும் போது ஜஸ்பிரித் பும்ராவின் காயம் மற்றும் அவரது உடற்தகுதி குறித்த முழு அறிவிப்பும் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
இதனல் இப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா மேற்கொண்டு பந்துவீசுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஒருவேளை அவர் பந்துவீசாத பட்சத்தில் அது இந்திய அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக அமையும். ஏனெனில் நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடிய 4 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். மற்ற இந்திய பந்துவீச்சாளர் சோபிக்க தவறிவரும் நிலையில், பும்ராவும் காயம் இந்திய அணிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.