ENG vs PAK: இங்கிலாந்து வீரர்களுக்கு கரோனா உறுதி; அணியை வழிநடத்தும் பென் ஸ்டோக்ஸ்!

Updated: Tue, Jul 06 2021 14:30 IST
7-members-of-england-cricket-squad-including-3-cricketers-found-covid-positive (Image Source: Google)

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கார்டிஃபில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நாளை மறுநாள் (ஜூலை 8) நடைபெறுகிறது. 

இந்நிலையில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள் உள்பட,7 பேருக்கு கரோனா கண்டறிதல் சோதனையின் முடிவில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையடுத்து தொற்று உறுதிசெய்யப்பட்ட அனைவரும் மருத்துவர்கள் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அத்தகவலில் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது. மேலும் தொற்று உறுதியான வீரர்களின் விவரம் ஏதும் குறிப்பிடப்படவில்லை. 

 

இருப்பினும் இத்தொடர் நடைபெறும் என்றும், பாகிஸ்தான் அணி உடனான தொடருக்கு பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான புதிய இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக அறிவிக்கப்பட்ட ஈயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை