10இல் 8 போட்டிகளில் இவரால் வெற்றியைப் பெற்றுத்தர முடியும் - உம்ரான் மாலிக்கை பாராட்டிய அஜய் ஜடேஜா!

Updated: Mon, Jan 09 2023 12:18 IST
‘8/10 times, he’ll finish the game’: Jadeja hails India star (Image Source: Google)

2023ஆம் ஆண்டில், இந்திய அணி தனது முதல் கிரிக்கெட் தொடரை இலங்கைக்கு எதிராக விளையாடியாது. மூன்று போட்டிகள் கொண்ட அந்த டி20 தொடரில் இளம் இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் அபாரமாக செயல்பட்டு 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

இளம் கேப்டன் ஹார்திக் பாண்டியாவின் தலைமையில் ஷிவம் மாவி, அறிமுக வீரராக களமிறங்கி முதல் போட்டியிலேயே 4 போட்டிகளை கைப்பற்றி மேட்ச் வின்னராக இருந்தார். அடுத்து, அக்ஸர் படேல் ஜடேஜாவின் இடத்தில் களமிறங்கி பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்றிலும் கலக்கி, தொடர் நாயகன் விருதை கைப்பற்றியுள்ளார்.

சூர்யகுமார் யாதவ் வழக்கம்போல 360 டிகிரியில் விளையாடி, புதுபுது ஷாட்களை ஆடி திணற வைத்து, இரண்டாவது டி20 போட்டியில் அரை சதத்தையும், மூன்றாவது போட்டியில் சதம் அடித்தும் முரட்டு பார்மை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டினார்.

இந்த மூன்று வீரர்களை தவிர்த்து, ஜம்மு எக்ஸ்பிரஸ் உம்ரான் மாலிக் தொடர்ந்து, ஒவ்வொரு பந்திலையும் இலங்கை பேட்டர்களை கதறவிட்டு இத்தொடரில் 7 ஓவர்களை வீசி அதிக விக்கெட்களை (7) கைப்பற்றிய பந்துவீச்சாளராக திகழ்கிறார்.

குறிப்பாக, இரண்டாவது டி20 போட்டியின்போது 155 வைகத்தில் பந்துவீசி, இந்திய அணிக்காக அதிவேகத்தில் பந்துவீசிய பௌலர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்து அசத்தினார். இந்நிலையில், உம்ரான் மாலிக் குறித்து முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பேசியுள்ளார்.

அதில், “இந்திய அணியில் ஜவகல் ஸ்ரீநாத்திற்கு பிறகு, தொடர்ந்து 145 வேகத்தில் பந்துவீச பந்துவீச்சாளர் கிடைக்கவில்லை. நீண்ட காலமாக இப்படிப்பட்ட பௌலருக்காக காத்திருந்த இந்திய அணிக்கு தற்போது உம்ரான் மாலிக் கிடைத்துள்ளார். இவரை இந்திய அணி நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 10இல் 8 போட்டிகளில் இவரால் வெற்றியைப் பெற்றுத்தர முடியும். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு போட்டியிலும் இவரால் 3 விக்கெட்களை எடுக்க முடியும். ஆகையால், மூன்று விதமான அணியிலும் இவரை சேர்த்து, ரெகுலராக வாய்ப்பு வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை