வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி மழையால் பாதியிலெயே ரத்து செய்யப்பட்டது. 

Advertisement

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று செல்ஹேட்டில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்துக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. 

Advertisement

அதன்படி ஸ்டீபன் தொஹானி, பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி, ஹேரி டெக்டர் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த லோர்கன் டக்கர் - கர்டிம் கேம்பர் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

அதன்பின் லோர்கன் டக்கர் 28 ரன்களிலும், கர்டிஸ் காம்பெர் 36 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து வந்த வீரர்களாலும் வங்கதேச அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதன்மூலம் அயர்லாந்து அணி 28.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்களில் ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய  ஹசன் மஹ்முத் 5 விக்கெட்டுகளையும், டஸ்கின் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும், எபோடட் ஹொசைன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.  

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News