SA20 League: லியூஸ் டு ப்ளூய் அதிரடி; வலுவான இலக்கை நிர்ணயித்தது ஜேஎஸ்கே!

Updated: Mon, Feb 06 2023 22:45 IST
A fantastic knock was Leus du Plooy of 81 runs takes JSK to 189-6 after 20! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்கவின் டி20 லீக் தொடரான எஸ்ஏ20 லீக் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் 29ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி - எம்ஐ கேப்டவுன் அணியை எதிர்கொண்டது.

ஜொஹனன்ஸ்பர்க் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள எம்ஐ கேப்டவு அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஜோபர் சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளேசிஸ் அடித்த பந்தை ரஷித் கான் அபாரமான டைவ் மூலம் கேட்ச் பிடித்து அசத்தினார். 

இதையடுத்து மற்றொரு தொடக்க வீரரான ரீஸா ஹென்றிக்ஸும் ரன் ஏதுமின்றி ஆட்டமிழக்க, அடுத்து வந்த மகன்யாவும் 4 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த லியூஸ் டு ப்ளூய் - மேத்யூ வேட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் ராக்கெட் வேகத்தில் உயர்த்தினர்.

இதில் தொடர்ந்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசிய மேத்யூ வேட் 18 பந்துகளில் 41 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, மறுமுனைலிருந்த லியூஸ் டு ப்ளூய் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் ஃபெரீரா 19, கைல் சிமன்ஸ் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 

இருப்பினும் இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த லியூஸ் டு ப்ளூய் 48 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 81 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களைச் சேர்த்தது. எம்ஐ கேப்டவுன் அணி தரப்பில் சாம் கரண், ஜோஃப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை