பேர் 4 பட்டியளில் விராட் கோலியை நீக்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!

Updated: Sun, Jul 09 2023 12:19 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜீலை 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பின் இந்திய அணி விளையாடப் போகும் முதல் டெஸ்ட் போட்டி என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரின் பேட்டிங் ஃபார்ம் மீது கடுமையான விமர்சனங்களை ரசிகர்கள் முன்வைத்து வருகிறார்கள்.

குறிப்பாக விராட் கோலி கடந்த 4 ஆண்டுகளில் ஒரேயொரு சதம் மட்டும் விளாசியுள்ளதோடு, பேட்டிங் சராசரியாக வெறும் 26.7ஆக குறைந்துள்ளது. 34 வயதாகும் விராட் கோலியின் பேட்டிங் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் உலகக்கோப்பைக்கு பின் விராட் கோலி ஓய்வை அறிவிக்கலாம் என்ற குரல்கள் எழுந்துள்ளன. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் விராட் கோலிக்கு அக்னி பரீட்சையாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து இந்திய அணி முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா காட்டமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை பேப் 4 என்ற வார்த்தையே இல்லை என்று நினைக்கிறேன். அந்த வார்த்தை பேப் 3 என்று மாறிவிட்டது. கேன் வில்லியம்சன், ஜோ ரூட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் பேட்டிங் சராசரி 50ஆக உள்ளது. 3 வீரர்களும் எளிதாக சதங்களுக்கு மேல் சதங்களை விளாசி வருகிறார்கள்.

ஆனால் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் எந்த இடத்தில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். என்னை பொறுத்தவரை பேப் 4ல் இருந்து விராட் கோலியை நீக்கிவிட்டு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமை இணைத்துக் கொள்ளலாம். டெஸ்ட் கிரிக்கெட்டில் பாபர் அசாம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் விராட் கோலி மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்ப முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை