மான்செஸ்டர் டெஸ்ட்: இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!

Updated: Tue, Jul 22 2025 19:02 IST
Image Source: Google

ENG vs IND, 4th Test: மான்செஸ்டரில் நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது. 

இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் தொடரைக் கைப்பற்றும், இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரை சமன்செய்யும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிகாக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றன. மேற்கொண்டு இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “அணியின் தொடக்க வீரர்கள் இடத்தில் எந்த மாற்றமும் இருக்காது. ஜெய்ஸ்வால் கடந்த போட்டியில் ரன்களைச் சேர்க்க தவறி இருந்தாலும் அது வழக்கமான ஒன்று தான். யராலும் தொடர்ச்சியாக ரன்களைச் சேர்க்க முடியாது. மறுபக்கம் கேஎல் ராகுல் சாதமடித்து சிறப்பான ஃபார்மில் இருப்பதால் தொடக்க வீரர் இடத்தில் மாற்றம் இருக்கக்கூடாது.

அதேசமயம் மூன்றாம் இடத்தில், கருண் நாயருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமா என்ற கேள்வி எழுந்து வருகிறது. கருண் நாயர் சிறப்பான ஃபார்மில் இல்லை. இருப்பினும், அவரால் ரன்களைச் சேர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன். அதனால் மூன்றாவது இடத்தில் இன்னும் ஒரு போட்டியில் அவரை விளையாடவைக்க விரும்புகிறேன். ஏனெனில் அவருக்கு மீண்டும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் கூட போகலாம்.

மேற்கொண்டு ஷுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோரிடத்திலும் எந்த மாற்றமும் இருக்காது. ஒருவேளை இப்போட்டியில் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை எனில், 6ஆம் வரிசையில் துருவ் ஜூரெல் இடம்பிடிக்க வேண்டும். இதன்மூலம் ரிஷப் பந்தை நீங்கள் ஒரு பேட்டராக மட்டுமே விளையாடும் வாய்ப்பும் உள்ளது. இதுதவிர்த்து ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் அவர்கள் இடத்தில் எந்த மாற்றமும் இருக்காது. 

பந்துவீச்சை பொறுத்தவரையில் பும்ராவும் சிராஜும் நிச்சயமாக விளையாடுவார்கள். அதேசமயம் இப்போட்டியில் ஆகாஷ் தீப் விளையாடவில்லை என்றால், அவரிடத்தில் அன்ஷுல் காம்போஜ் அல்லது பிரசித் கிருஷ்ணாவை தேர்வு செய்யலாம். இதில் பிரசித் கிருஷ்ணா ஏற்கெனவே இத்தொடரில் நிறைய ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். எனவே அன்ஷுல் காம்போஜ் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பை பெறுவார் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ஆகாஷ் சோப்ரா கணித்த இந்திய அணி பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், கருண் நாயர், ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஆன்ஷுல் கம்போஜ்/பிரஷித் கிருஷ்ணா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

Also Read: LIVE Cricket Score

இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக்கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை