ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக களமிறங்குவதை தவிர்க்க வேண்டும் - ஆரோன் ஃபிஞ்ச்!
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரரான டேவிட் வார்னர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்ததைத் தொடர்ந்து, அணியின் தொடக்க வீரராக ஸ்டீவ் ஸ்மித் தாமாக முன்வந்து களமிறங்கினார். ஆனால் ஸ்டீவ் ஸ்மித் தனது வழக்கமான இடத்தை விட்டு தொடக்க வீரராக களமிறங்கிய டெஸ்ட் போட்டிகளில் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறார்.
இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் வரிசையில் ஸ்டீவ் ஸ்மித் தனது முந்தைய நம்பர் 4 இடத்திற்கு மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் ஃபின்ச் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நீங்கள் கேமரூன் கிரீனுக்கான சிறந்த இடத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும்போது, அணியில் ஏற்படும் மற்ற மாற்றங்களையும் அவர் மீதுதான் சுமத்த விரும்புகிறார்கள்.
இப்படி எல்லோரும் வெளிப்படையாகத் தெரிவிக்கையில், கொஞ்சம் அர்த்தமுள்ளதாக இருந்தது. ஆனால் இந்த நடவடிக்கை எங்கிருந்து வந்தது என்பதை என்னால் பார்க்க முடிகிறது, ஏனனில் அந்த சமயத்தில் ஸ்டீவ் தனது கையை உயர்த்தி, 'இது ஒரு புதிய சவாலுக்கான நேரம்,' என்று கூறினார், மேலும் அவர் தன்னை ஒரு நல்ல தொடக்க வீரராக நிரூபித்தார், அதில் எவ்வித சந்தேகமில்லை.
ஆனால், உங்கள் கேரியரில் சராசரியாக 60 க்கு அருகில் இருக்கும் ஒரு இடத்தைவிட்டு, வேறு ஒரு இடத்தில் களமிறங்குவது சற்று முரன்பாடக இருக்கும் என்று தோன்றுகிறது. என் கருத்துப்படி, நீங்கள் உங்களுக்கான சிறந்த இடத்திற்கு திரும்புவதற்கான நேரம் இது என்று நினைக்கிறேன். அதனால் நீங்கள் ஏப்போதும் போல் நான்காம் இடத்திலேயே விளையாடி அணியின் நிலைத்தன்மையை உறுதிசெய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
ஒருவேளை ஆரோன் ஃபிஞ்ச் கூறுவதைக் கேட்டு ஸ்டீவ் ஸ்மித் தனது வழக்கமான பேட்டிங் வரிசையான நான்காம் வரிசையில் களமிறங்கும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணி தங்களது கூடுதல் பேட்டர் ஒருவரை இழப்பதுடன், அணியின் புதிய தொடக்க வீரரையும் தேடவேண்டிய நிலைக்கு தள்ளப்படும். ஏனெனில் ஸ்மித் தொடக்க வீரராக களமிறங்கியதில் இருப்து, கேமரூன் க்ரீன் நான்காம் வரிசையில் களமிறங்கி வருவது குறிப்பிடத்தக்கது.