ABF vs GUY, CPL 2024, Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் ஃபால்கன்ஸ் அணியானது முதல் லீக் போட்டியிலேயே அதிர்ச்சி தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் வாரியர்ஸ் அணியானது தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடனும் இப்போட்டியை எதிர்கொள்வதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ABF vs GUY: Match Details

  • மோதும் அணிகள் - ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ்
  • இடம்- சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம், ஆண்டிகுவா
  • நேரம் - ஆகஸ்ட் 31, அதிகாலை 4.30 மணி

ABF vs GUY: Live Streaming Details

Advertisement

கரீபியன் பிரிமிய லீக் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பு ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி நேரலையில் பார்க்க முடியும்.

Advertisement

ABF vs GUY: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 00
  • ஃபால்கன்ஸ் - 00
  • வாரியர்ஸ் - 00 

ABF vs GUY: Pitch Report

ஆண்டிகுவாவில் உள்ள  சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் உள்ள ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது. ஏனெனில் இங்கு பந்து எதிர்பார்க்கும் வேகத்தைவிட மெதுவாகவும், பிட்ச்சில் சற்று நின்றும் வரும் என்பதால் பேட்டர்கள் தங்களது ஷாட்டை விளையாட சிரமப்படுவர். அதுமட்டுமில்லாம் காற்றின் வேகமும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இங்கு டாஸ் வெல்லு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கும்.

Antigua and Barbuda Falcons and Guyana Amazon Warriors Possible XIs

ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ்: டெடி பிஷப், ஃபகார் ஸமான், சாம் பில்லிங்ஸ், கோஃபி ஜேம்ஸ், ஜூவல் ஆண்ட்ரூ, இமாத் வாசிம், ஃபேபியன் ஆலன், கிறிஸ் கிரீன் (கே), ஷமர் ஸ்பிரிங்கர், ரோஷன் பிரைமஸ், முகமது அமீர்

கயானா அமேசான் வாரியர்ஸ்: ஷாய் ஹோப், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஷிம்ரான் ஹெட்மையர், கெவ்லான் ஆண்டர்சன், ஆசம் கான், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், கீமோ பால், டுவைன் பிரிட்டோரியஸ், ரேமண்ட் ரீஃபர், இம்ரான் தாஹிர் (கே), குடாகேஷ் மோட்டி.

ABF vs GUY: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: சாம் பில்லிங்ஸ், ஷாய் ஹோப், ரஹ்மானுல்லா குர்பாஸ்
  • பேட்டர்ஸ்: ஷிம்ரான் ஹெட்மையர், ஃபகர் ஸமான்
  • ஆல்ரவுண்டர்கள்: கிறிஸ் கிரீன் (துணை கேப்டன்), இமாத் வாசிம், டுவைன் பிரிட்டோரியஸ், ஷமர் ஸ்பிரிங்கர், ரொமாரியோ ஷெப்பர்ட் (கேப்டன்)
  • பந்து வீச்சாளர்: முகமது அமீர்
Advertisement

ABG vs GUY Match 2 Dream11 Prediction, Today Match ABG vs GUY, ABG vs GUY Dream11 Team, Fantasy Cricket Tips, ABG vs GUY Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the Caribbean Premier League 2024

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News