டி10 லீக்: கெயில், சால்ட் அதிரடியில் டீம் அபுதாபி வெற்றி!

Updated: Sun, Nov 28 2021 21:30 IST
Abu Dhabi T10: Explosive Gayle and Salt propel Abu Dhabi to win against Chennai (Image Source: Google)

டி10 லீக் தொடரில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் டீம் அபுதாபி அணி, சென்னை பிரேவ்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற டீம் அபுதாபி முதலில் பந்துவீசுவதாக முடிவுசெய்தது. 

அதன்படி களமிறங்கிய சென்னை பிரேவ்ஸ் அணிக்கு முகமது ஷசாத் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். 30 பந்துகளை எதிர்கொண்ட ஷசாத் 53 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். 

ஆனால் மற்ற வீரர்கள் சொதப்பியதால் 10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை மட்டுமே சேர்த்தது. அபுதாபி அணி தரப்பில் கேப்டன் லிவிங்ஸ்டோன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

அதன்பின் வெற்றி இலக்கைத் துரத்திய டீம் அபுதாபி அணியில் பால் ஸ்டிர்லிங், லிவிங்ஸ்டோன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 

பின்னர் ஜோடி சேர்ந்த பிலிப் சால்ட் - கிறிஸ் கெயின் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இதில் சால்ட் அரைசதம் அடித்து அசத்தினார். 

இப்போட்டியில் 20 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட சால்ட் 63 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெயில் இறுதிவரை களத்தில் நின்று அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். 

இதன்மூலம் டீம் அபுதாபி அணி 7 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை பிரேவ்ஸ் அணியை வீழ்த்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை