அபுதாபி டி10 லீக் 2023: ஜேசன் ராய் காட்டடி; அபுதாபியை வீழ்த்தி சென்னை த்ரில் வெற்றி!

Updated: Wed, Nov 29 2023 22:25 IST
Image Source: Google

அபுதாபி டி10 லீக் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் டீம் அபுதாபி மற்றும் தி சென்னை பிரேவ்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அபுதாபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. 

அதன்படி களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்க வீரர் ஜேசன் ராய் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் களமிறங்கிய கோப் ஹெர்ஃப்ட் 14, முன்ஸி 2, ஸ்டீவி எஸ்கின்ஸி 4, கேப்டன் சரித் அசலங்கா ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இருப்பினும் மறுபக்கம் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜேசன் ராய் 39 பந்துகளில் 6 பவுண்டரி, 7 சிக்சர்களை விளாசி 84 ரன்களைச் சேர்த்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன்மூலம் சென்னை பிரேவ்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டீம் அபுதாபி அணிக்கு கைல் மேயர்ஸ் - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கைல் மேயர்ஸ் 18 ரன்களிலும், அலெக்ஸ் ஹேல்ஸ் 13 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டாம் பாண்டன் 2 ரன்களிலும், ஆசிஃப் கான் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய லுயிஸ் டு ப்ளூய் - காலின் இங்ராம் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டு ப்ளூய் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 47 ரன்களையும், காலின் இங்க்ராம் 21 ரன்களையும் சேர்த்தனர். 

இதன்மூலம் டீம் அபுதாபி அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் சென்னை பிரேவ்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் டீம் அபுதாபி அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை