டி10 கிரிக்கெட் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை பிரேவ்ஸ் - டீம் அபுதாபி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற அபுதாபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய சென்னை அணிக்கு பனுகா ராஜபக்ஷ அரைசதம் அடித்து உதவினார். இதனால் 10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 132 ரன்களைச் சேர்த்தது.

Advertisement

இதையடுது இலக்கைத் துரத்திய அபுதாபி அணிக்கு பிலிப் சால்ட் - பால் ஸ்டிர்லிங் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பால் ஸ்டிர்லிங் 44 ரன்களில் அட்டமிழந்தார்.

இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த பிலிப் சால்ட் அரைசதம் கடந்து அசத்தினார். அவருடன் இணைந்த கேப்டன் லியாம் லிவிங்ஸ்டோனும் சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார். 

Also Read: T20 World Cup 2021

இதன்மூலம் டீம் அபுதாபி அணி 9.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை பிராவ்ஸை வீழ்த்தி அசத்தியது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News