Adam Zampa Record: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் ஆடம் ஸாம்பா சிறப்பாக செயல்படும் பட்சத்தில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசல்வுட்டின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

Advertisement

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement

இப்போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரில் முன்னிலைப் பெறும். மறுபக்கம் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை சமன்செய்ய முயற்சி செய்யும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணி நட்சத்திர வீரர் ஆடம் ஸாம்பா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

ஆடம் ஸாம்பா ஆஸ்திரேலியாவின் நம்பர் 2 டி20 பந்து வீச்சாளராக உள்ளார். அவர் இதுவரை 96 போட்டிகளில் 117 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன், சர்வதேச டி20 போட்டிகளில் 100க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே ஆஸ்திரேலிய வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார். இந்நிலையில் இப்போட்டியில் அவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக தனது 15ஆவது டி20 விக்கெட்டை வீழ்த்துவார்.

இதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் எனும் பெருமையையும் அவர் பெறுவார். தற்போது இந்த சாதனையை ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் இருவரும் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ள நிலையில், ஆடம் ஸாம்பா 11 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விண்டிஸுக்கு எதிராக அதிக டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர்கள்

  • ஜோஷ் ஹேசில்வுட் - 14 விக்கெட்டுகள்
  • மிட்செல் ஸ்டார்க் - 14 விக்கெட்டுகள்
  • ஆடம் ஜாம்பா - 11 விக்கெட்டுகள்
  • ஷேன் வாட்சன் - 9 விக்கெட்டுகள்
  • மிட்செல் மார்ஷ் - 8 விக்கெட்டுகள்
Also Read: LIVE Cricket Score
Advertisement

ஆஸ்திரேலியா டி20 அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், கூப்பர் கோனொலி, டிம் டேவிட், பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, சேவியர் பார்ட்லெட், ஜோஷ் இங்கிலிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், மாட் குஹ்னெமன், க்ளென் மேக்ஸ்வெல், மிட்ச் ஓவன், மேத்யூ ஷார்ட், ஆடம் ஜாம்பா.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News