ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடைபெற்று முடிந்த 4 டி20 போட்டிகளில் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று டி20 தொடரைக் கைப்பற்றியது. இதில் நேற்று ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற முக்கியமான 4ஆவது போட்டியில் மீண்டும் 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 3 – 1* (5) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே கைப்பற்றியுள்ளது.

Advertisement

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் போராடி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக இளம் நம்பிக்கை நட்சத்திரம் ரிங்கு சிங் அதிரடியாக 46, ஜித்தேஷ் சர்மா 35, ஜெயஸ்வால் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக துவார்ஷூயிஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து 175 ரன்கள் துரத்திய ஆஸ்திரேலியா ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் 154/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

Advertisement

அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் மேத்தியூ வேட் 36 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்ஸர் பட்டேல் 3, தீபக் சஹார் 2 விக்கெட்டுகளை சாய்ந்தனர். இந்த வெற்றிக்கு 4 ஓவரில் வெறும் 16 ரன்கள் மட்டும் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்த அக்ஸர் பட்டேல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 

இந்நிலையில் தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய அவர், “வீட்டில் இருந்த போது நான் நிறைய அம்சங்களை முயற்சித்தேன். அவை இன்று நன்றாக வந்தது. குறிப்பாக என்னுடைய பலத்தின் அடிப்படையில் பந்து வீசிய நான் அதற்காக சில முறை அடி வாங்கினாலும் கவலைப்படாமல் செயல்பட்டேன். மேலும் ஸ்டம்ப் லைனில் வீசினால் பனியின் தாக்கத்தை தவிர்க்க முடியும் என்பதையும் உணர்ந்து செயல்பட்டேன்.

பொதுவாக டி20 கிரிக்கெட்டில் நீங்கள் அடி வாங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதால் அட்டாக் செய்யும் மனநிலையுடன் பந்து வீச வேண்டும். அதை பின்பற்றி சில விக்கட்டுகளை நீங்கள் எடுத்தால் நல்ல உணர்வை கொடுக்கும். காயத்தை சந்தித்த தருணங்களில் நான் என்னை முன்னேற்றுவதில் கவனம் செலுத்தினேன். குறிப்பாக என்னுடைய பந்து வீச்சில் சில வேரியசன்களை கொண்டு வந்தது தற்போது வெற்றிகரமாக செயல்பட உதவியது” என்று கூறியுள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News