Afghanistan vs Bangladesh 1st ODI Dream11 Prediction: வங்கதேச அணியானது ஆஃப்கானிஸ்தான் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement

அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது நாளை (நவம்பர் 06) ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதுடன், சமீப காலங்களில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை எட்டிவருகின்றனர். இதனால் இப்போட்டியில் எந்த அணியானது வெற்றிபெற்று இந்த ஒருநாள் தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

Advertisement

AFG vs BAN 1st ODI: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம்
  • இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம், ஷார்ஜா
  • நேரம் - நவம்பர் 6, மாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)

AFG vs BAN 1st ODI Pitch Report

ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 260 போட்டிகள் நடந்துள்ள நிலையில், இதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 136 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 122 முறையும் வெற்றி கண்டுள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 223 ரன்களாக உள்ள நிலையில், இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 364 ரன்கள் உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லு அணி முதாலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

AFG vs BAN 1st ODI: Where to Watch?

Advertisement

ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன் கோட் செயலி மூலம் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

AFG vs BAN ODI Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 16
  • ஆஃப்கானிஸ்தான் - 10
  • வங்கதேசம் - 06
  • முடிவில்லை - 00

Afghanistan vs Bangladesh 1st ODI Probable Playing XI

Advertisement

ஆஃப்கானிஸ்தான் உத்தேச லெவன்: ரஹ்மானுல்லா குர்பாஸ், ரியாஸ் ஹசன், ஹஸ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), ரஹ்மத் ஷா, அஸ்மத்துல்லா ஒமர்சாய், முகமது நபி, ரஷித் கான், அல்லா கசன்ஃபர், ஃபரித் அகமது, நங்கேலியா கரோட்/நூர் அகமது, ஃபசல்ஹக் ஃபரூக்கி.

வங்கதேச உத்தேச லெவன்: சௌமியா சர்க்கார், தஞ்ஸித் ஹசன், நஸ்முல் ஹுசைன் சாண்டோ(கேப்டன்), தாவ்ஹித் ஹிரிடோய், முஷ்ஃபிக்கூர் ரஹீம், மஹ்முதுல்லா, மெஹ்தி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், முஸ்தஃபிசூர் ரஹ்மான், தஸ்கின் அஹ்மது, ஷோரிஃபுல் இஸ்லாம்.

AFG vs BAN 1st ODI Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ரஹ்மானுல்லா குர்பாஸ்
  • பேட்ஸ்மேன் - நஜ்முல் ஹுசைன் சாண்டோ, ரியாஸ் ஹசன்
  • ஆல்-ரவுண்டர்கள் - முகமது நபி, அஸ்மத்துல்லா ஒமர்சாய், ரிஷாத் ஹுசைன், மெஹ்தி ஹசன் மிராஜ் (கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - முஸ்தஃபிசூர் ரஹ்மான், ரஷித் கான் (துணை கேப்டன்), ஃபசல்ஹக் ஃபரூக்கி, தஸ்கின் அகமது
Advertisement

AFG vs BAN 1st ODI Dream11 Prediction, AFG vs BAN Dream11 Prediction, Today Match AFG vs BAN, AFG vs BAN ODI Series, AFG vs BAN Dream11 Team, Fantasy Cricket Tips, AFG vs BAN Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Afghanistan vs Bangladesh

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News