AFG vs IRE, 3rd T20I: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!

Updated: Tue, Mar 19 2024 11:56 IST
AFG vs IRE, 3rd T20I: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்! (Image Source: Google)

ஆஃப்கானிஸ்தான் அணி அயர்லாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் அடங்கிய கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள இரண்டு டி20 போட்டிகளில் முதல் போட்டியில் அயர்லாந்து அணியும், இரண்டாவது போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியும் வெற்றிபெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளன. 

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஷார்ஜாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ் 6 ரன்களிலும், செதிகுல்லா அடல் 19 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து எமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய இப்ராஹிம் ஸத்ரான் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். 

அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய வீரர்களில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 3 ரன்களுக்கும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முகமது இஷாக் 27 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, கடந்த போட்டியில் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த அனுபவ வீரர் முகமது நபி வெறும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சிக்கொடுத்தார். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இப்ராஹிம் ஸத்ரான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

ஆனால் அடுத்து களமிறங்கிய ரஷித் கான் வெறும் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய இப்ராஹிம் ஸத்ரான் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 72 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களைச் சேர்த்தது.  அயர்லாந்து தரப்பில் பந்துவீசிய அனைவரும் தலா ஒரு விக்கெட்டை இழந்தனர்.

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் நட்சத்திர வீரர்கள் ஆண்ட்ரூ பால்பிர்னி 9 ரன்களிலும், லோர்கன் டக்கர் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் பால் ஸ்டிர்லிங் 4 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த ஹாரி டெக்டர் - கர்டிஸ் காம்பேர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

பின் 16 ரன்களில் ஹாரி டெக்டரும், 28 ரன்களில் கர்டிஸ் காம்பெரும், அடுத்து களமிறங்கிய ஜார்ஜ் டக்ரெல் 3 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க அடுத்து வந்த 21 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அயர்லாந்து அணி 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 98 ரன்களில் ஆல் அவுட்டானது.

இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தினார். இப்போட்டியில் அரைசதம் கடந்த இப்ராஹிம் ஸத்ரான் ஆட்டநாயகன் விருதையும், சர்வதேச கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஷித் கான் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை