ஆஃப்கானிஸ்தான் - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி தோஹாவில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச தீர்மானித்தது.
Advertisement
அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் குர்பஸ், உஸ்மான் கானி இணை சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
Advertisement
பின்னர் ஜோடி சேர்ந்த ரஹ்மத் ஷா - ஷாஹிதி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினார்.
பின் ரஹ்மத் 70 ரன்களிலும், ஷாஹிதி 73 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களைச் சேர்த்தது.
நெதர்லாந்து அணி தரப்பில் பிராண்டன் குளொவர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து 223 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்தி நெதர்லாந்து அணி விளையாடி வருகிறது.