ஆஃப்கானிஸ்தான் அணியானது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஷார்ஜாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியானது தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்கள் டோனி டி ஸோர்ஸி 11 ரன்களுக்கும், ரீஸா ஹென்ரிக்ஸ் 9 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

Advertisement

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரம் 2 ரன்களிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் கைல் வெர்ரைன் 10 ரன்களுக்கும், ஜேமி ஸ்மித் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தானர். இதனால் தென் ஆப்பிரிக்க அணியானது 36 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த வியான் முல்டர் - ஃபோர்டுன் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அபாரமாக விளையாடிய வியான் முல்டர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

Advertisement

அதன்பின் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 52 ரன்கள் எடுத்த நிலையில் வியான் முல்டர் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஃபோர்டுன் 16 ரன்களுக்கும், நந்த்ரே பர்கர் ஒரு ரன்னிலும், இறுதியில் லுங்கி இங்கிடி ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணியானது 33.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 106 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஃபசல்ஹக் ஃபரூக்கி 4 விக்கெட்டுகளையும், அல்லா கசான்ஃபர் 3 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - ரியாஸ் ஹசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஹ்மனுல்லா குர்பாஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரஹ்மத் ஷாவும் 8 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணியும் 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் அணியின் மற்றொரு தொடக்க வீரர் ரியாஸ் ஹசன் 16 ரன்களிலும், கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி 16 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

பின்னர் ஜோடி சேர்ந்த அஸ்மதுல்லா ஒமர்ஸாய் - குல்பதின் நைப் இணை அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஒமர்ஸாய் 25 ரன்களையும், குல்பதின் நைப் 34 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 26 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக ஆஃப்கானிஸ்தான் முதல் முறையாக வெற்றியைப் பதிவுசெய்து வாலாறு படைத்துள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News