Afghanistan and South Africa 3rd ODI, Dream11 Prediction: ஆஃப்கானிஸ்தான் அணியானது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளௌயாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஃப்கானிஸ்தான் அணியானது வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும ஒருநாள் போட்டியானது இன்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தொடரை வென்று அசத்தியுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி இப்போட்டியிலும் வெற்றிபெற்று ஒயிட்வஷ் செய்யும் முனைப்புடனும், அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணியானது ஆறுதல் வெற்றியைத் தேடும் முனைப்புடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் இதில் எந்த அனி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

AFG vs SA 3rd ODIMatch Details

  • மோதும் அணிகள் - ஆஃப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம், ஷார்ஜா
  • நேரம் - செப்டம்பர் 22, மாலை 5.30 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

AFG vs SA 3rd ODI Live Streaming Details

ஆஃப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சி நிறுவனமும் நேரலை ஒளிபரப்பு செய்யவில்லை. இருப்பினும் இத்தொடரை ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் ரசிகர்கள் நேரலையில் கண்டுகளிக்கலாம். 

AFG vs SA: Head-to-Head In ODIs

  • மோதிய போட்டிகள் - 04
  • தென் ஆப்பிரிக்கா - 02
  • ஆஃப்கானிஸ்தான் - 02
  • முடிவில்லை - 00

AFG vs SA: Ground Pitch Report

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 259 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 136 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 121 முறை பந்துவீச்சை தேர்வு செய்த அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரானது 223 ரன்களாகவும், இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோரானது 191 ரன்களாவும் உள்ளது. இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 364 ரன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

Afghanistan and South Africa Possible XIs

ஆப்கானிஸ்தான்: ரியாஸ் ஹசன், ரஹ்மானுல்லா குர்பாஸ், ரஹ்மத் ஷா, அஸ்மத்துல்லா ஒமர்சாய், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கே), முகமது நபி, இக்ராம் அலிகில், ரஷித் கான், நங்கேயாலியா கரோட், அல்லா கசன்ஃபர், ஃபசல்ஹாக் ஃபரூக்கி

Advertisement

தென் ஆப்பிரிக்கா: ரீசா ஹென்ட்ரிக்ஸ், டெம்பா பவுமா (கே), டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், கைல் வெர்ரேய்ன், பிஜோர்ன் ஃபோர்டுயின், நந்த்ரே பர்கர், நகாபா பீட்டர், லுங்கி இங்கிடி.

AFG vs SA 3rd ODI: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்: ரஹ்மானுல்லா குர்பாஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
  • பேட்டர்ஸ்: டெம்பா பவுமா (கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள்: ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், அஸ்மத்துல்லா ஒமர்சாய் (துணை கேப்டன்), முகமது நபி
  • பந்துவீச்சாளர்கள்: ரஷித் கான், அல்லா கசன்ஃபர், லுங்கி இங்கிடி, ஃபசல்ஹக் ஃபரூக்கி.

AFG vs SA 3rd ODI Dream11 Prediction, Today Match AFG vs SA, AFG vs SA Dream11 Team, Fantasy Cricket Tips, AFG vs SA Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Afghanistan and South Africa

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News