Afghanistan vs Uganda Dream11 Prediction Match 5, ICC T20 World Cup 2024: ஒன்பதாவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று முதல் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறவுள்ள ஐந்தாவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் மோதும் முதல் போட்டி இது என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

AFG vs UGA Match Details

  • மோதும் அணிகள் - ஆஃப்கானிஸ்தான் vs உகாண்டா
  • இடம் - பிராவிடன்ஸ் மைதானம், கயானா
  • நேரம் - காலை 6 மணி (இந்திய நேரப்படி)

AFG vs UGA : Pitch Report

Advertisement

பிராவிடன்ஸ் மைதானமானது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சமநிலைக்கு பெயர் போனது. இங்குள்ள மைதானமாது முதல் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றவகையில் வேகம் மற்றும் ஸ்விங்கிற்கு வழிவகுக்கும். அதன்பின் ஆட்டம் செல்ல செல்ல சுழற்பந்து வீச்சாளர்களாலும் தாக்கத்தை ஏறபடுத்த முடியும். ஒட்டுமொத்தமாக, இந்த மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமாக கருதப்படுகிறது, குறிப்பாக ஆடுகளத்தின் வேகம் குறையும் போது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பெரும் உதவியாக அமையும். இருப்பினும் களத்தில் நின்று விளையாடும் பேட்டர்களால் நிச்சயம் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் சேஸிங்கை தேர்வு செய்வது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

AFG vs UGA : Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 00
  • ஆஃப்கானிஸ்தான் - 00
  • உகாண்டா - 00
  • முடிவில்லை - 00

AFG vs UGA : Live Streaming Details

Advertisement

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

Afghanistan vs Uganda Predicted Teams

ஆஃப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், குல்பதின் நைப், இப்ராஹிம் ஸத்ரான், அஸ்மத்துல்லா உமர்சாய், நஜிபுல்லா ஸத்ரான், முகமது நபி, ரஷீத் கான் (கே), கரீம் ஜனத், முஜீப் உர் ரஹ்மான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, நவீன்-உல்-ஹக்.

உகாண்டா: ரோனக் படேல், ராபின்சன் ஒபுயா, அல்பேஷ் ரம்ஜானி, ரோஜர் முகாசா, ரியாசத் அலி ஷா, பிரையன் மசாபா (கே), ஃபிரெட் அச்செலம், தினேஷ் நக்ரானி, காஸ்மாஸ் கியேவுடா, ஜுமா மியாகி, பிலால் ஹாசன்

AFG vs UGA Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: ரஹ்மனுல்லா குர்பாஸ் (கேப்டன்)
  • பேட்டர்ஸ்: ராபின்சன் ஒபுயா, ரோஜர் முகாசா, குல்பதின் நைப், இப்ராஹிம் ஸத்ரான்
  • ஆல்-ரவுண்டர்கள்: அஸ்மதுல்லா ஒமர்ஸாய், முகமது நபி
  • பந்துவீச்சாளர்கள்: முஜூப் உர் ரஹ்மான், ரஷித் கான் (துணைக்கேப்டன்), பிலால் ஹசன், அல்பேஷ் ரம்ஜானி

Afghanistan vs Uganda Fantasy Tips, AFG vs UGA: Dream11 Team, Afghanistan vs Uganda : Predicted XIs, AFG vs UGA: Pitch Report, AFG vs UGA: Live Streaming Details, AFG vs UGA: Head-to-Head, AFG vs UGA: Dream11 Prediction match 5 ICC T20 World Cup 2024

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News