இந்தியாவில் நடைபெற இருந்த கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, 7ஆவது சீசன் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இத்தொடரில் பங்கெற்பதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதன்படி அனைத்து அணிகளும் தங்கள் விளையாடும் வீரர்களை அறிவித்து வருகின்றனர்.
அந்தவரிசையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர வீரர்களான ரஷித் கான், முகமது நபி, ஆஸ்கர் ஆஃப்கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
ஆஃப்கானிஸ்தான் : ரஷீத் கான், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஹஸ்ரத்துல்லா ஸசாய், உஸ்மான் கானி, ஆஸ்கர் ஆஃப்கான், முகமது நபி, நஜிபுல்லா ஸட்ரான், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, முகமது ஷாசாத், முஜீப் உர் ரஹ்மான், கரீம் ஜனத், குல்பதீன் நாயப், நவீன் உல் ஹக்ரான், ஹமித் ஹசான்,ஷரபுதீன் அஷ்ரப், தவ்லத் ஜத்ரான், ஷபூர் ஜத்ரான், கைஸ் அகமது
ரிசர்வ் வீரர்கள்: அப்சர் ஜசாய், ஃபரித் அகமது மாலிக்