எட்டாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 16ஆம் தேதி தொடங்கிய இத்தொடரின் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்து, இன்றுமுதல் சூப்பர் 12 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

Advertisement

இதில் இன்று நடைபெறும் சூப்பர் 12 போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், முகமது நபி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டி பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 

Advertisement

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி டி20 கிரிக்கெட்டில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின், டி20 உலகக்கோப்பையில் வெல்லும் ஒரு அணியாக பார்க்கப்பட்டு வருகிறது. அந்த அணியில் பட்லர், ஹேல்ஸ், மொயீன் அலி, ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டோன், மாலன் என டி20 நட்சத்திரங்கள் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் பந்துவீச்சு தரப்பில் கிறிஸ் வோக்ஸ், சாம் கரண், டேவிட் வில்லி, கிறிஸ் ஜோர்டன், டைமல் மில்ஸ் ஆகியோரும் இருப்பதால், நிச்சயம் எதிரணி பேட்ஸ்மேன்கள் தடுமாறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. 

முகமது நபி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியையும் அவ்வளவு எளிதாக எடைபோட முடியாது. ஏனெனில் கடந்த காலங்களில் அந்த அணி பல முன்னணி அணிகளையும் மண்ணைக் கவ்வவைத்துள்ளது. 

இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதற்கேற்றது போல் பேட்டிங்கில் குர்பாஸ், ஸஸாய், ஸத்ரான், நபி ஆகியோரும், பந்துவீச்சில் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், ஃபரூக்கி ஆகியோரும் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs ஆஃப்கானிஸ்தான்
  • இடம் - பெர்த் மைதானம்
  • நேரம் - மாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 2
  • இங்கிலாந்து - 2
  • ஆஃப்கானிஸ்தான் 0 

உத்தேச லெவன்

Advertisement

இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கே), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மாலன், மொயின் அலி, ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித், பென் ஸ்டோக்ஸ், மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ்

ஆப்கானிஸ்தான்: முகமது நபி (கே), நஜிபுல்லா சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஹஸ்மத்துல்லா உமர்சாய், ஃபரீத் அஹ்மத் மாலிக், ஃபசல் ஹக் ஃபரூக்கி, ஹஸ்ரதுல்லா ஸஸாய், இப்ராஹிம் ஸத்ரான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ரஷித் கான்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - ஜாஸ் பட்லர், ரஹ்மானுல்லா குர்பாஸ்
  • பேட்டர்ஸ் - அலெக்ஸ் ஹேல்ஸ், நஜிபுல்லா சத்ரான், டேவிட் மலான், ஹஸ்ரதுல்லா ஸஸாய்
  • ஆல்-ரவுண்டர்கள் - மொயின் அலி, ரஷித் கான்
  • பந்துவீச்சாளர்கள் - மார்க் வுட், அடில் ரஷித், ஃபசல் ஹக் ஃபரோ
Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News