சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இது ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் இரண்டுக்கும் தனித்தனியே வழங்கப்படுகிறது. இந்நிலையில் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை யார் என்ற பரிந்துரை பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. 

Advertisement

அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் ஷாஹீன் அஃப்ரிடி, ஐக்கிய அரபி அமீரக அணியின் முகமது வசீம் மற்றும் நமீபியா அணியின் எராஸ்மஸ் ஆகியோரு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாஹீன் அஃப்ரிடி 8 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், தொடர் நாயகன் விருதையும் வென்றார். 

Advertisement

அதேபோல் நமீபியா அணியின் எராஸ்மஸ் ஓமன் அணிக்கு எதிரான டி20 தொடரில் 8 விக்கெட்டுகளையும், 145 ரன்களையும் சேர்த்ததுடன் தொடரை கைப்பற்றவும் முக்கிய காரணமாக அமைந்தார். இத்தொடரில் அபாரமாக விளையாடிய எராஸ்மஸ் இரண்டு போட்டிகளில் ஆட்டநாயகன் விருதையும் வென்றுள்ளார். மேலும் யுஏஇ அணி கேப்டன் முகமது வசீம் ஏசிசி பிரீமியர் கோப்பை தொடரில் அபாரமாக செயல்பட்டதன் மூலம் இப்பட்டியலில் இணைந்துள்ளார். 

அதேபோல் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதிற்கான பரிந்துரை பட்டியலில் தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹீல் மேத்யூஸ் மற்றும் இலங்கை அணியின் கேப்டனான சமாரி அத்தப்பது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் லாரா வோல்வார்ட் மற்றும் சமாரி அத்தபத்து ஆகியோர் தென் ஆப்பிரிக்கா - இலங்கை தொடரில் அபாரமாக விளையாடி ரன்களை குவித்தனர். 

அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹீலி மேத்யூஸ் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தியதுடன் தொடர் நாயகி விருதையும் வென்று அசத்தினார். இதன்மூலம் இவர்கள் மூவரது பெயரும் பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இவர்களில் வாக்கெடுப்பின் அடிப்படையில் மார்ச் மாதத்தின் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News